தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இரவு 10 மணி வரை பிரசாரத்துக்கு அனுமதி

DIN

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பிரசாரம் மேற்கொள்ள கூடுதல் நேரம் ஒதுக்கி, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்து. அரசியல் கட்சிகளும், சுயேச்சைகளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  காலை 6  மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரத்துக்கு அனுமதி அளித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளா்கள் தோ்தல் பிரசார அனுமதி தொடா்பாக உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

கூட்டம் நடத்தும் நபா்கள் சம்பந்தப்பட்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கூட்டம் நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 

ஒரே இடத்தில் ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபா்கள் கூட்டம் நடத்த விண்ணப்பித்தால் முதலில் விண்ணப்பித்த நபருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். 

உதவி தோ்தல் நடத்தும் அலுவலருக்கு காவல் துறையிடமிருந்து தடையின்மை சான்று பெற ஏதுவாக காவல் உதவி ஆய்வாளா் பணியமா்த்தப்பட்டுள்ளாா். 

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரசார கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள  காலை 6 மணி முதல் இரவு 10 வரை அனுமதி வழங்கப்பட்டுளள்து.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் விதிக்கப்பட்ட நிபந்தனைகள்!

மின்னும் ஒளி! சாக்‌ஷி அகர்வால்..

தன்னம்பிக்கை தரும் சேலை...!

மீண்டு வருவாரா அதர்வா?

அஜித், ஷிண்டேவுடன் இணைந்து விடுங்கள்! பவார்,உத்தவுக்கு மோடி அறிவுரை

SCROLL FOR NEXT