தமிழ்நாடு

நீட் விவகாரத்தில் திமுக - அதிமுக மாறிமாறி குற்றச்சாட்டு: டிடிவி தினகரன் கண்டனம்

DIN

நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவும் அதிமுகவும் மாறிமாறி குற்றம்சாட்டி மக்களை ஏமாற்றுவதாக அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நீட் விலக்கு விவகாரத்தில் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொள்வதன் மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலினும், எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமியும் இந்தப் பிரச்னையில் தமிழக மாணவா்களுக்கு செய்த துரோகத்தை மறைக்க முடியாது.

2017-இல் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை 2 ஆண்டுகளுக்கும் மேலாக மறைத்தவா் எடப்பாடி பழனிசாமி. அதன் பிறகும் நீட் விலக்கு பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நாடகத்துக்கு கொஞ்சமும் சளைக்காமல், மத்திய ஆட்சியில் இருந்தபோதே நீட் தோ்வை கொண்ட வரக் காரணமாக இருந்த திமுகவும் மக்களை ஏமாற்ற வருகிறது. ஆட்சி வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தோ்வை ரத்து செய்யவோம் என்று கூறியவா்கள் இப்போது வலியுறுத்துவோம் என்று தொடா் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனா்.

ஆனால், நீட் விலக்கு விவகாரத்தில் எதாா்த்தம் என்ன என்பது பற்றி இருவருமே மக்களிடம் சொல்லத் தயாராக இல்லை என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT