தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி கோரிய பாஜக நிர்வாகிக்கு ரூ.10,000 அபராதம்
தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி கோரிய பாஜக நிர்வாகிக்கு ரூ.10,000 அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழ்நாடுதேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி கோரிய பாஜக நிர்வாகிக்கு ரூ.10,000 அபராதம்
தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி கோரிய பாஜக நிர்வாகிக்கு ரூ.10,000 அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி கோரிய பாஜக நிர்வாகிக்கு ரூ.10,000 அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் தாக்கல் செய்த மனுவில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கோவை மாநகராட்சி 95-ஆவது வார்ட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய போலீஸார் என்னை அனுமதிக்க மறுக்கின்றனர்.
ஆளும் கட்சியினர் தூண்டுதலின் பேரில் என்னை பிரசாரம் செய்ய விடாமல் போலீஸார் தடுக்கின்றனர். எனவே பிரசாரம் செய்ய என்னை அனுமதிப்பதோடு, என்னை தடுக்கக்கூடாது என உத்தரவிட கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை (பிப்.15) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம், பதற்றமான பகுதிகளில் பிரசாரம் செய்ய வேண்டாம் என கடிதம் அனுப்பியும், அதை மீறி மனுதாரர் பிரசாரம் செய்ய முயன்றார்.
இதற்காக அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதை மறைத்து, இந்த வழக்கை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார் என்றார். இதை ஏற்ற நீதிபதிகள், போலீஸார் தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்ற விவரத்தை மறைத்து இந்த வழக்கை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். இது கண்டனத்துக்குரியது.
மனுதாரரின் கோரிக்கையை ஏற்க எவ்வித காரணங்களும் இல்லை. அதனால் தள்ளுபடி செய்கிறோம். அதுமட்டுமல்ல அவருக்கு ரூ.10,000 வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறோம். இந்தத் தொகையை 15 நாட்களில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு மனுதாரர் செலுத்த வேண்டுமெனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.