கடலூர், விருத்தாசலம் நகைக்கடைகளில் வருமான வரித்துறை சோதனை
கடலூர் மற்றும் விருத்தாசலத்தில் அமைந்துள்ள நகைக்கடைகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர்: கடலூர் மற்றும் விருத்தாசலத்தில் அமைந்துள்ள நகைக்கடைகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள நகைக் கடையின் கிளை புதுச்சேரியிலும் உள்ளதோடு இவர்களுக்குச் சொந்தமாக மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இதையும் படிக்க.. காதல் மனங்களை இணைக்கும் பாரீஸ் 'லவ் லாக்' பாலம்
Advertisement
Advertisement
மேலும் நகைக்கடையின் உரிமையாளர்கள், கடலூரில் மிகப்பெரிய வணிக வளாகத்தையும் கட்டி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலையில் கடலூர் வருமான வரித்துறையினர் நகைக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். மேலும், நிறுவனத்துடன் தொடர்புடைய அலுவலகங்கள், உரிமையாளர் வீடு உள்பட 13 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேப் போன்று விருத்தாசலத்தில் உள்ள பிரபலமான நகைக்கடையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மாவட்டத்தில் மொத்தம் 15 இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது. இச்சோதனையால் கடைகள் அடைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.