வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு.. 
தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு மலர்தூவி வரவேற்பு

ராணிப்பேட்டையில் வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. 

DIN

ராணிப்பேட்டையில் வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. 

'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தலைப்பில் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட வ.உ.சிதம்பரனார், பாரதியார் வீரமங்கை வேலுநாச்சியார் உள்ளிட்ட தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் பெருமைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட  அலங்கார ஊர்தி வேலூர் மாவட்டத்தில் இருந்து இன்று மாலை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்தது.

ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான  சிக்கராஜபுரம் பகுதியில் அலங்கார ஊர்தி வந்தபோது மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று அலங்கார ஊர்தியை பாரம்பரிய கோலாட்டம் மேளதாளங்கள் முழங்க  மலர் தூவி  வரவேற்றனர்.

இந்த வாகன ஊர்தி நாளை பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களும் கரோனா நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளுடன் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து மாவட்ட எல்லைப் பகுதியான ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கம் பகுதி வழியாக நாளை மாலை திருவண்ணாமலை மாவட்டம் செல்ல உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT