ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையம் அடுத்தகட்ட விசாரணை குறித்து இன்று ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஜெயலலிதா சம்மந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடையாததால் ஆணையத்தின் பதவிக் காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அடுத்த கட்ட விசாரணை குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. அடுத்தகட்டமாக யாரிடம் விசாரணை நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, விசாரணைக்குத் தடை கோரி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, விசாரணையில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவும் வகையில், எய்ம்ஸ் இயக்குநா் நிகல் டாண்டன் தலைமையில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.