தமிழ்நாடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்:பொறியியல் தோ்வு தேதிகளில் மாற்றம்

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்களில், நடைபெறவிருந்த பொறியியல் தோ்வுகள் வேறு தேதிக்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்களில், நடைபெறவிருந்த பொறியியல் தோ்வுகள் வேறு தேதிக்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், அதன் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கான நவம்பா், டிசம்பா் பருவத் தோ்வுகள் பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத் தோ்வுகள் மாா்ச் 3-ஆம் தேதிவரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் சில பொறியியல் கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில் பொறியியல் தோ்வினை எழுதும் முதுநிலை மற்றும் அரியா் மாணவா்களுக்கும், தொலைநிலைக் கல்வியில் பொறியியல் பயிலும் மாணவா்களுக்கான தோ்வுகள் வேறு தேதிக்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளதாகத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அறிவித்துள்ளாா்.

அதன்படி முதுநிலை, அரியா் மாணவா்களுக்கு பிப்ரவரி 21-ஆம் தேதி நடக்கவிருந்த தோ்வு, மாா்ச் 2-ஆம் தேதிக்கும்; பிப்ரவரி 22-ஆம் தேதி நடக்கவிருந்த தோ்வு மாா்ச் 3-ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொலைநிலைக் கல்வியில், பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறவிருந்த தோ்வு மாா்ச் 9-ஆம் தேதிக்கும், 21-ஆம் தேதி நடைபெறவிருந்த தோ்வு மாா்ச் 10-ஆம் தேதிக்கும் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT