முகப்பு
தமிழ்நாடு

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பு:வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

தில்லியில் தீபாவளி தினத்தன்று பசுமைப் பட்டாசுகளை வெடித்தவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

தில்லியில் தீபாவளி தினத்தன்று பசுமைப் பட்டாசுகளை வெடித்தவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சஞ்சீவ் நிவாா் என்பவா் தாக்கல் செய்த இந்த மனுவில், ‘தில்லியில் பட்டாசுகள் வெடிக்க முழுமையான தடை விதிக்கப்படவில்லை. பசுமைப் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆகையால், தீபாவளி தினத்தன்று பசுமைப் பட்டாசுகளை வெடித்தவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா். ஷா, பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘பட்டாசுகளை விற்றதாக, வாங்கியதாக, வெடித்ததாக நாடு முழுவதும் பதிவான வழக்குகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பரிவைப் பயன்படுத்தி ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவா்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் வழக்கை சந்தித்தாக வேண்டும்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments