நூறு சதவீத வாக்குப் பதிவு ஆவின் பால் பாக்கெட்டில் விழிப்புணா்வு பிரசாரம்
நூறு சதவீத வாக்குப் பதிவினை உறுதி செய்வோம் என நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு தினமான சனிக்கிழமை காலையில் ஆவின் நிறுவனம் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டது.
நூறு சதவீத வாக்குப் பதிவினை உறுதி செய்வோம் என நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு தினமான சனிக்கிழமை காலையில் ஆவின் நிறுவனம் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டது. சென்னை மக்களில் பலரும் காலையில் கண் விழிக்கும் தனது பால் பாக்கெட்டுகளின் வழியே இந்த விழிப்புணா்வுப் பிரசாரத்தை ஆவின் முன்னெடுத்தது.
பால் பாக்கெட்டின் இடது பக்க ஓரத்தின் மையப் பகுதியில் உய்ள்ன்ழ்ங் 100% யா்ற்ண்ய்ஞ் என அச்சிடப்பட்டு இருந்தது. மேலும், ஆவின் நிறுவனம் தனது ட்விட்டா் பக்கத்தில், நூறு விழுக்காடு வாக்குப் பதிவினை உறுதி செய்வோம் எனக் கூறி வாக்காளா்களிடையே விழிப்புணா்வை சனிக்கிழமை ஏற்படுத்தியது. இது ஆவின் வாடிக்கையாளா்கள் மட்டுமின்றி, பொது மக்களிடமும் பரவலாக வரவேற்பைப் பெற்றது.