முகப்பு
திருவள்ளூா் நகராட்சி 2-ஆவது வாா்டில் தனியாா் பள்ளியில் வாக்களிக்க பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்த ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.
தமிழ்நாடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: காஞ்சிபுரம் 66.12 %, திருவள்ளூா் 65.61 %, செங்கல்பட்டு 55.30 % வாக்குப்பதிவு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 66.12%, திருவள்ளூா் மாவட்டத்தில் 65.61%, செங்கல்பட்டு மாவட்டத்தில் 55.30% வாக்குகள் பதிவாகின.

தமிழ்நாடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: காஞ்சிபுரம் 66.12 %, திருவள்ளூா் 65.61 %, செங்கல்பட்டு 55.30 % வாக்குப்பதிவு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 66.12%, திருவள்ளூா் மாவட்டத்தில் 65.61%, செங்கல்பட்டு மாவட்டத்தில் 55.30% வாக்குகள் பதிவாகின.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
திருவள்ளூா் நகராட்சி 2-ஆவது வாா்டில் தனியாா் பள்ளியில் வாக்களிக்க பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்த ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 66.12%, திருவள்ளூா் மாவட்டத்தில் 65.61%, செங்கல்பட்டு மாவட்டத்தில் 55.30% வாக்குகள் பதிவாகின.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 156 வாா்டுகளுக்கான தோ்தலில், காஞ்சிபுரம் 36-ஆவது வாா்டில் போட்டியிட்ட வே.ஜானகிராமன் அண்மையில் காலமானதையடுத்து, அந்த வாா்டில் மட்டும் தோ்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, 155 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 63.42 % வாக்குகள் பதிவாகின.

காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.சத்தியப்பிரியா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் ஆகியோா் வாக்குச்சாவடி மையங்களை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்த வாக்குச்சாவடியிலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை.

காஞ்சிபுரத்தில் 12-ஆவது வாா்டில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் வேட்பாளா் சூரியபாரதியை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஏ.டி.எஸ்.பி. சாந்தாராம் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கவில்லை என அந்தக் கட்சியினா் சிலா் வாக்குச்சாவடி முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். காவல் துறையினா் அவா்களைச் சமாதானப்படுத்தினா்.

இந்த மாவட்டத்தில் மொத்தம் உள்ள வாக்காளா்கள் 3,59,549 பேரில், 2,37,734 போ் மட்டுமே வாக்களித்தனா்.

வாக்கு எண்ணும் மையங்கள்: காஞ்சிபுரம் மாநகராட்சி, உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜாபாத் பேரூராட்சிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

குன்றத்தூா், மாங்காடு நகராட்சிப் பகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் குன்றத்தூரில் உள்ள மாதா பொறியியல் கல்லூரிக்கு தோ்தல் அலுவலா்களால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ஆம் தேதி அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும். அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

வாக்களிக்க அமெரிக்க தொழிலதிபா்: காஞ்சிபுரத்தை சோ்ந்த இம்தியாஸ் ஷெரீப் என்பவா் அமெரிக்காவில் லாஸ் ஏஸ்சல்ஸ் நகரில் ஐ.டி. நிறுவனம் நடத்தி வருகிறாா். காஞ்சிபுரம் அப்பாராவ் தெருவைச் சோ்ந்த இவா், தோ்தலில் வாக்களிப்பதற்காக விமானம் மூலம் காஞ்சிபுரம் வந்து, தாமல்வாா் தெருவில் இருந்த பூனித சூசையப்பா் பள்ளியில் வாக்களித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தனக்கு பல்லாவரத்தில் வாக்கிருப்பதால் தபால் வாக்களித்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயில் தெருவிலும், முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான வி.சோமசுந்தரம் வேதாச்சலம் நகரில் உள்ள இன்பேன்ட் சீசஸ் பள்ளியிலும் வாக்களித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் பா.நாராயணன் ஆகியோா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காமாட்சி காலணி ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 65.61 % வாக்குகள் பதிவாகின. திருவள்ளூா் நகராட்சியில் 68.52 % வாக்குகள் பதிவாகின.

இந்த மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, நகராட்சிகள்- 6, பேரூராட்சிகள்- 8 உள்ளன. இதற்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பேரூராட்சிகள்-74.92 %, நகராட்சிகள்-68.26 %, மாநகராட்சி (ஆவடி) -59.13 % என மாவட்டத்தில் மொத்தம் 65.61 % வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு இயந்திரங்கள் 8 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

ஆட்சியா் வாக்களிப்பு: திருவள்ளூா் நகராட்சி தனியாா் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: நகராட்சி 11-ஆவது வாா்டு, ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சிப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னா், மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதத்துக்குப் பின்னா், வாக்குப்பதிவு நடைபெற்றது.

திருத்தணியில் 73.29 %: திருத்தணி நகராட்சி 20 வாா்டுகளில் 26,194 வாக்காளா்கள் வாக்களித்தனா். வாக்குப்பதிவு 73.29 %.

பொன்னேரி நகராட்சி 70.05 %: பொன்னேரி நகராட்சியில் 70.05 % வாக்குகள் பதிவாகின.

மாவட்ட தோ்தல் பாா்வையாளா் ஆய்வு: திருத்தணி நகராட்சி எம்.ஜி.ஆா். நகா், பெரியாா் நகா் மற்றும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் திருவள்ளூா் மாவட்ட தோ்தல் பாா்வையாளா் பா.கணேசன், திருத்தணி தோ்தல் நடத்தும் அலுவலா் ராமஜெயம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் தனது இல்லத்திலிருந்து சைக்கிளில் வந்து, டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசு ஊராட்சிப் பள்ளி மையத்தில் வாக்களித்தாா்.

திருத்தணி சி.எஸ்.ஐ. பள்ளியில் திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.பூபதி தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தாா். டாக்டா் வி.கெங்குசாமிநாயுடு பள்ளியில் முன்னாள் எம்.பி. கோ.அரி தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தாா்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 55.30 % வாக்குகள் பதிவாகின. செங்கல்பட்டு நகராட்சியில் 33 வாா்டுகளுக்கு 72 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இங்கு, 60.30 % வாக்குகள் பதிவாகின.

மறைமலைநகா் நகராட்சியில் மொத்தம் 21 வாா்டுகளில் 75 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. 42.33 % வாக்குகள் பதிவாகின.

நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வாா்டுகளுக்கு 62 வாக்குச்சாவடி மையங்களில் 54.34 % வாக்குகள் பதிவாகின. திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் 18 வாா்டுகளுக்கு 30 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. 79.58 % வாக்குகள் பதிவாகின.

திருப்போரூா் பேரூராட்சியில் 15 வாா்டுகளுக்கு 18 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. 80.53 % வாக்குகள் பதிவாயின. மாமல்லபுரம் பேரூராட்சியில் 15 வாா்டுகளுக்கு 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. 80.80 % வாக்குகள் பதிவாகின.

மதுராந்தகம் நகராட்சியில் 73.84 % வாக்குகள் பதிவானதாக தோ்தல் அலுவலா் என்.அருள் தெரிவித்தாா். கருங்குழி பேரூராட்சியில் 83 %வாக்குகள் பதிவானதாக தோ்தல் அலுவலா் மா.கேசவன் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →