தமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சியின் இளம் உறுப்பினராக 21 வயது பெண் தேர்வு

DIN

நாகர்கோவில் மாநகராட்சியின் 17ஆவது வார்டு உறுப்பினராக 21 வயது பட்டதாரி கெளசுகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள இவரது தந்தை இளஞ்செழியன் திமுகவின் கன்னியாகுமரி மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து கெளசுகியிடம் கேட்ட போது, 
நான் பி.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றுள்ளேன். எங்கள் குடும்பம் பாரம்பரியமாக திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். எனது தந்தை மற்றும் தாத்தாவும் திமுக உறுப்பினர்கள். இளம் வயதிலிருந்தே எனக்கு பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. 

எங்கள் பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் நான் போட்டியிட்டேன். நான் பொறுப்பேற்றதும் எங்கள் பகுதியின் சாலை வசதி குடிநீர், கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த முயற்சி செய்வேன். மேலும் எங்கள் பகுதிக்கு ஏற்கெனவே வந்து கொண்டிருந்த நகரப் பேருந்தை மீண்டும் இயக்க முயற்சி செய்வேன் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT