கோவை மாநகராட்சி: 5-வது வார்டில் பாஜகவை முந்திய சுயேச்சை 
தமிழ்நாடு

கோவை மாநகராட்சி: 5-வது வார்டில் பாஜகவை முந்திய சுயேச்சை 

கோவை மாநகராட்சி 5-வது வார்டில் பாஜக-வை முந்திய சுயேச்சை வேட்பாளர்  446 வாக்குகள் அதிகம் பெற்றார்

DIN

கோவை மாநகராட்சி 5-வது வார்டில் பாஜக-வை முந்திய சுயேச்சை வேட்பாளர்  
446 வாக்குகள் அதிகம் பெற்றார்.

கோவை மாநகராட்சி 5-வது வார்டில் 6,719 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4,308 வாக்குகள் பதிவாகியது. இன்று காலை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன்குமார் 2,368 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

அதிமுக வேட்பாளர் 1,004 வாக்குகளும், அமமுக வேட்பாளர் 18 வாக்குகள் மட்டுமே பெற்றனர். சுயேச்சை வேட்பாளர் ஆனந்த் குமார் 654 வாக்குகள் பெற்றார். 

இந்த வார்டில் பா.ஜ.க வேட்பாளர் ஜெயலட்சுமி 208 வாக்குகள் மட்டுமே பெற்று சுயேச்சை வேட்பாளரை விட 446 வாக்குகள் குறைவாகப் பெற்றார். ஒரு தேசிய கட்சி வேட்பாளர் சுயேச்சை வேட்பாளரை விட குறைவான வாக்குகள் பெற்றிருப்பது பாஜகவி-னரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

SCROLL FOR NEXT