தாரமங்கலம் நகராட்சியில் திமுக 12 இடங்களில் வெற்றி
தாரமங்கலம் பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் முதல்முறை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 27 இடங்களில் தேர்தல் நடைபெற்றது.
தமிழ்நாடுதாரமங்கலம் நகராட்சியில் திமுக 12 இடங்களில் வெற்றி
தாரமங்கலம் பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் முதல்முறை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 27 இடங்களில் தேர்தல் நடைபெற்றது.
தாரமங்கலம் பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் முதல்முறை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 27 இடங்களில் தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் முன்னிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், திமுக 12 இடங்களில் வெற்றி பெற்றது.
இதற்கு அடுத்தபடியாக 7 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதிமுக மற்றும் பாமக தலா 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பட்ட முறையில் திமுக அதிகப்படியாக 12 வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டிக்கு 14 வார்டுகள் தேவைப்படும் நிலையில், சுயேச்சைகள் நகராட்சித் தலைவருக்கான தேர்தலில் முக்கிய இடம் வகிக்க வாய்ப்புள்ளது.
தாரமங்கலம் நகராட்சி உருவாக்கப்பட்டு, முதல்முதலாக அதன் தலைவர் பதவியை அலங்கரிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.