கோவை மாநகராட்சியில் பாஜக-வை முந்திய சுயேச்சை வேட்பாளர்
கோவை மாநகராட்சி 5-வது வார்டில் பாஜக-வை முந்திய சுயேச்சை வேட்பாளர்446 வாக்குகள் அதிகம் பெற்றார்.
தமிழ்நாடுகோவை மாநகராட்சியில் பாஜக-வை முந்திய சுயேச்சை வேட்பாளர்
கோவை மாநகராட்சி 5-வது வார்டில் பாஜக-வை முந்திய சுயேச்சை வேட்பாளர்446 வாக்குகள் அதிகம் பெற்றார்.
கோவை மாநகராட்சி 5-வது வார்டில் பாஜக-வை முந்திய சுயேச்சை வேட்பாளர்
446 வாக்குகள் அதிகம் பெற்றார்.
கோவை மாநகராட்சி 5-வது வார்டில் 6,719 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4,308 வாக்குகள் பதிவாகியது. இன்று காலை தேர்தல் முடிவு வெளியானது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன்குமார் 2,368 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் 1,004 வாக்குகளும், அமமுக வேட்பாளர் 18 வாக்குகள் மட்டுமே பெற்றனர். சுயேச்சை வேட்பாளர் ஆனந்த் குமார் 654 வாக்குகள் பெற்றார். இந்த வார்டில் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி 208 வாக்குகள் மட்டுமே பெற்று சுயேச்சை வேட்பாளரைவிட 446 வாக்குகள் குறைவாகப் பெற்றார். ஒரு தேசிய கட்சி வேட்பாளர் சுயேச்சை வேட்பாளரைவிட குறைவான வாக்குகள் பெற்றிருப்பது பாஜகவி-னரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.