முகப்பு
தமிழ்நாடு

நகர்ப்புறத் தேர்தல் முடிவுகள்: பிப். 28ல் காங். நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை

நகர்ப்புறத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வருகிற  திங்கள்கிழமை(பிப்.28) ஆலோசனை மேற்கொள்கிறார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
கோப்புப்படம்
பகிர்:

நகர்ப்புறத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வருகிற  திங்கள்கிழமை(பிப்.28) ஆலோசனை மேற்கொள்கிறார். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக கூட்டணி பெருவாரியான இடங்களைப் பெற்றுள்ளது. திமுகவுடன் கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மாநகராட்சி வாா்டுகளில் 67 இடங்களிலும், நகராட்சி வாா்டுகளில் 151 இடங்களிலும், பேரூராட்சி வாா்டுகளில் 368 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து, நகர்ப்புறத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வருகிற  திங்கள்கிழமை(பிப்.28) ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள், மாவட்டத் தலைவர்கள் பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வருகிற திங்கள்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள 'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் கலந்துகொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →