நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பாக கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முன் அமைக்கப்பட்டிருந்த தா.பாண்டியன் உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் முழக்கங்கள் எழுப்பி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எஸ்.மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி நிறுவனர் நல்வினை செல்வன், திராவிடர் விடுதலை கழக நகர அமைப்பாளர் பிடல் சேகுவேரா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.