தமிழ்நாடு

தமிழகத்தில் 86.22% முதல் தவணை, 58.82% பேருக்கு 2வது தவணை தடுப்பூசி: சுகாதாரத் துறை

DIN

தமிழகத்தில் 86.22 சதவிகிதத்தினருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 58.82 சதவிகிதத்தினருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில் 17வது கட்ட மெகா தடுப்பூசி திட்ட முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதும் 17-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் திட்டம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி போடாத அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மாநிலம் முழுவதும் 86.22% மக்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 58.82% மக்களுக்கு 2-ஆம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் 5 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

சென்னையில் இடவசதியுள்ள கல்லூரி விடுதிகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT