தமிழ்நாடு

சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி திட்டம்: முதல்வர் தொடக்கிவைத்தார்

தமிழகத்தில் 15-18 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

DIN

தமிழகத்தில் 15-18 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

நாட்டில் 18 வயதைக் கடந்தவா்களுக்கு கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி ஆகிய கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 15 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கின. 

அவா்களுக்கு கோவேக்ஸின் மட்டுமே செலுத்தப்பட வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் இத்திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். சென்னை, சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதைத் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டார்.

திட்டத்தை தொடக்கி வைத்துப் பேசிய முதல்வர், ஒமைக்ரான் தற்போது மிரட்ட தொடங்கியிருக்கிறது. ஒமைக்ரானில் இருந்து பாதுகாத்துக்கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும். சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அனைவரும் பாதுகாப்புடன் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT