தமிழ்நாடு

புதுக்கோட்டை சிறுவன் பலி: நீதி கேட்டு மக்கள் சாலைமறியல்

திருச்சி - காரைக்குடி நெடுஞ்சாலையிலுள்ள நார்த்தாமலையில் சிறுவன் புகழேந்தியின் மரணத்திற்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் ஒரு மணிநேரமாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

DIN

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் காவல் துறை பயிற்சியின்போது குண்டடிபட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் மரணத்திற்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் ஒரு மணிநேரமாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் திருச்சி - காரைக்குடி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை அருகிலுள்ள பசுமலைப்பட்டியில் காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தில், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை காவல்துறையினா் கடந்த வியாழக்கிழமை காலை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.

அப்போது, மலையடிவாரக் குடிசையிலிருந்த கலைச்செல்வன் மகன் புகழேந்தியின் தலையில் குண்டு பாய்ந்தது. தொடா்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தொடா்ந்து அவருக்கு வியாழக்கிழமை அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டு, தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. எனினும் அவர் இன்று (ஜன.3) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், சிறுவனின் மரணத்திற்கு நீதி கேட்டு நார்த்தாமலை பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் திருச்சி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்

அணுமையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளரானதாக வழக்கு: தில்லி நீதிமன்றத் தீா்ப்பு ஒத்திவைப்பு

தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு ஆளுநா் பாராட்டு

பிகாரில் ரூ.4,447 கோடியில் 4 வழிச்சாலை- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

SCROLL FOR NEXT