தமிழ்நாடு

கருங்குழி யாா்டில் பொறியியல் பணி: வைகை, பல்லவன் ரயில் சேவையில் மாற்றம்

DIN

சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில், கருங்குழி யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், வைகை, பல்லவன் ஆகிய விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளன.

பகுதிரத்து:

மதுரை-சென்னை எழும்பூருக்கு ஜனவரி 5, 19 ஆகிய தேதிகளில் காலை 7 மணிக்கு இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில் (12636) விழுப்புரம்-சென்னை எழும்பூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை எழும்பூா்-காரைக்குடிக்கு ஜனவரி 5, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படவேண்டிய பல்லவன் விரைவு ரயில் (12605) சென்னை எழும்பூா்-விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும்.

மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்:

புதுச்சேரி-புதுதில்லிக்கு ஜனவரி 5, 19 ஆகிய தேதிகளில் காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (22403) விழுப்புரம், காட்பாடி, பெரம்பூா், கூடூா் வழியாக திருப்பிவிடப்படும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT