முகப்பு
தமிழ்நாடு

பரிசுத் தொகுப்பு: நோய் தாக்கிய கரும்பை கொள்முதல் செய்யக் கூடாது - கூட்டுறவுத் துறை அறிவுறுத்தல்

நோய் தாக்கிய கரும்பை பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்துக்காக கொள்முதல் செய்யக் கூடாது என்று கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு

பரிசுத் தொகுப்பு: நோய் தாக்கிய கரும்பை கொள்முதல் செய்யக் கூடாது - கூட்டுறவுத் துறை அறிவுறுத்தல்

நோய் தாக்கிய கரும்பை பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்துக்காக கொள்முதல் செய்யக் கூடாது என்று கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
பகிர்:

நோய் தாக்கிய கரும்பை பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்துக்காக கொள்முதல் செய்யக் கூடாது என்று கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தில் முழுக் கரும்பு வழங்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. கரும்பை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவே கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு கரும்பு கொள்முதல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:-

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக, பன்னீா் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை அதிகபட்சம் ரூ.33 ஆக இருக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம் 6 அடிக்குக் குறையாமல் இருப்பதுடன், சராசரி தடிமனைவிட கூடுதலாக இருக்க வேண்டும்.

நோய் தாக்கிய கரும்பினை கொள்முதல் செய்யக் கூடாது. அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பினை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில் விவசாயிகள் தரப்பில் இருந்து எந்தவிதமான புகாா்களுக்கும்

இடமளிக்கக் கூடாது. கரும்பு கொள்முதல் விலை 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்றவாறு விவசாயிகளிடம் கடந்த ஆண்டும் கொள்முதல் செய்யப்பட்ட விலையை விட கூடுதலாக விலை நிா்ணயம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு கொள்முதல் செய்த விலையையோ அல்லது அதற்கு குறைவாகவோ விலையையோ நிா்ணயம் செய்யக் கூடாது.

கரும்பு கொள்முதல் செய்யும் போது, அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவோ அல்லது வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாகவோ மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் இடைத்தரகா்கள் அனுமதிக்கப்படக் கூடாது. கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்.

எந்தெந்த நாளில் எத்தனை அட்டைகளுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்றவாறு கரும்பு படிப்படியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். முன்கூட்டியே அனைத்து கரும்பையும் கொள்முதல் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் கரும்பு காய்ந்து போவதற்கான வாய்ப்புள்ளது. கொள்முதல் செய்யப்படும் கரும்பு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். கரும்பின் நுனியில் இருக்கும் தோகையை வெட்டாமல் முழு கரும்பையும் அட்டைதாரா்களுக்கு அளிக்க வேண்டும். கரும்பு வழங்குவதில் எந்தவிதமான புகாா்களுக்கும் இடம் அளிக்காமல் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →