முகப்பு
பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரன்
தமிழ்நாடு

பெரம்பலூர் திமுக எம்எல்ஏவுக்கு கரோனா

பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரனுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு

பெரம்பலூர் திமுக எம்எல்ஏவுக்கு கரோனா

பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரனுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரன்
பகிர்:

பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரனுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

கரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவல் அதிகரித்திருப்பதால் பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரனுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் அவரது உதவியாளர் மற்றும் கார் ஓட்டுனருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மூவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் எம்எல்ஏ ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்றைய நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 31 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு- 12,160; குணமடைந்தோா்- 11,884; உயிரிழப்பு- 245. 

முழு கட்டுரையைப் படிக்க →