தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத்துக்கு உடனடியாக தடை: எடப்பாடி கே.பழனிசாமி, ராமதாஸ் வலியுறுத்தல்

DIN

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

எடப்பாடி கே. பழனிசாமி: ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனால் வங்கி ஊழியா் மணிகண்டன் தனது குடும்பத்தினரைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு அதிமுக அரசு தடை விதித்து இருந்தது. நீதிமன்ற உத்தரவால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இளைஞா்கள் மற்றும் பல குடும்பங்களையும் பாழாக்கும் இந்தச் சூதாட்டத்தை சட்டம் இயற்றி தடை செய்ய அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்.

ராமதாஸ்: ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், அந்த வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படக்கூட இல்லை. உச்சநீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்காமல், ஏற்கெனவே உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்து திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்றுவது தான் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே தீா்வு ஆகும். நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT