தமிழ்நாடு

சிறாா் சட்ட விதிகளை திருத்த நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும்: உயா்நீதிமன்றம்

DIN

சிறாா் நீதி சட்ட விதிகளை திருத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் சிறாா் நீதி சட்டத்தின்படி, குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா்களைத் தோ்ந்து எடுக்க உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 7 போ் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். ஆனால், இதற்கு எதிராக மாவட்ட நீதிபதி, ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு விதிகளை கொண்டு வந்துள்ளது என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் விசாரித்தனா்.

அப்போது தோ்வுக் குழு நியமனம் தொடா்பான தமிழ்நாடு சிறாா் நீதி சட்ட விதிகளை திருத்துவது குறித்து விளக்கமளிக்க அரசுத் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இரண்டு வாரம் அவகாசம் வழங்குகிறோம். அதற்குள் விதிகளை திருத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரித்து விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT