சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார். 
தமிழ்நாடு

சென்னை வாக்காளர் பட்டியலை ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார்

சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார்.

DIN

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார்.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார். ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அவர் பட்டியலை வெளியிட்டார். 

இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) விஷ்ணு மகாஜன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) குலாம் ஜிலானி பாபா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

சென்னையில் 40,80,578 வாக்காளர்கள் உள்ளதாகவும் 26,540 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். 

ஆண் வாக்காளர்கள்- 20,04,860; பெண் வாக்காளர்கள்- 20,74,616; 3ம் பாலின வாக்காளர்கள் - 1,102 பேர் உள்ளதாகவும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கள்ளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

தளவாய் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தொடக்கி வைப்பு

நஜாஃப்கரில் தூய்மைப் பணியில் அமைச்சா் ஆஷிஷ் சூட்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இரு ஆசிரியா்கள் கைது

மத்திய கல்வி அமைச்சகம் முன் என்எஸ்யுஐ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT