காஞ்சிபுரத்தில் புகைப்படத்துடன் கூடி ய இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட அதனை பெற்றுக் கொண்டார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)மகாராணி. 
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள் 13,49,933 பேர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி புதன்கிழமை வெளியிட்டதுடன் மொத்த வாக்காளர்கள் 13,49,933 பேர் எனவும் தெரிவித்தார்.

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி புதன்கிழமை வெளியிட்டதுடன் மொத்த வாக்காளர்கள் 13,49,933 பேர் எனவும் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மா.ஆர்த்தி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட அதனை ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)மகாராணி பெற்றுக் கொண்டார்.

இதன் பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 6,56,760 பேர், பெண் வாக்காளர்கள் 6,92,996 பேர், இதர வாக்காளர்கள் 177 பேர் உள்பட மொத்தம் 13,49,933 பேர். 

வாக்காளர் பட்டியல் விபரங்கள் அனைத்து வாக்குப்பதிவு அலுவலகங்கள், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் இந்த வாக்காளர் பட்டியலை நேரில் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT