தமிழ்நாடு

குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு: தேர்வர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு

மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட முதன்மைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது

DIN


மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட முதன்மைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளதை அடுத்து தமிழக அரசு தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

குடிமைப் பணிகள் தேர்வு(முதன்மை) நாளை 7, 8, 9, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நாடு முழுவதும் குடிமையியல் முதன்மைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. பல மாநிலங்களில் கரோனா சூழலை கருத்தில்கொண்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தேர்வர்கள் எந்தவித பிரச்னையும் இன்றி தேர்வு மையங்களுக்கு செல்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் யுபிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளித்து, கட்டுப்பாடுகளையும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையும் அறிவித்தது. 

மேலும், போட்டித் தேர்வுகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்லும் தேர்வர்கள், நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் தங்களது தேர்வுகூட அனுமதி சீட்டு, அழைப்புக் கடிதம் ஆகியவற்றைக் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT