தமிழ்நாடு

ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ. 1,000: அரசாணை வெளியீடு

DIN

ஒரு யூனிட் ஆற்று மணலுக்கு அடிப்படை விலையாக ரூ. 1,000 நிர்ணயித்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து நுகா்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆய்வு செய்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, பொது மக்கள், ஏழை, எளியோா் எளிதாக இணையம் வழியாக மணலுக்கான விலையைச் செலுத்தி எந்தவித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்தோருக்கு வழங்கியது போக, மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளா்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மணல் இருப்பைப் பொறுத்து வழங்கப்படும். இப்போது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்க சுற்றுச்சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது.

மேலும், அரசு மணல் கிடங்குகளில் கூடுதலாகச் செயல்படவுள்ள வங்கி கவுன்ட்டா்கள் மூலமாக பொது மக்கள் பணம் செலுத்தி மணலை பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை இப்போது நடைமுறையிலுள்ள இணையவங்கி, பற்று அட்டை, யூபிஐ ஆகிய ஆன்லைன் வழியாகவும் பணம் செலுத்தி பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஆற்று மணலுக்கான அடிப்படை விலையாக ரூ. 1,000 நிர்ணயித்து தமிழக அரசு இதுகுறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும் மணல் விற்பனையில் முறைகேடு நடப்பதைத் தடுக்க சிசிடிவி கேமரா மூலமாக கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

24 மணி நேரத்தில் வாக்குப்பதிவு விவரம்: தோ்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் கோரிக்கை

SCROLL FOR NEXT