தமிழ்நாடு

கரோனா அதிகரிப்பு: அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்

தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

DIN

தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 27.12. 2021 அன்று 605 ஆக இருந்த கரோனா தொற்று, மூன்றாவது அலை வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து 3.1. 2022 அன்று 1,728 ஆக அதிகரித்தது. இதன் விளைவாக இரவு நேர ஊரடங்கு, ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல், ஞாயிறு முழு ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை என பல புதிய கட்டுப்பாடுகள் 5.1. 2022 அன்று விதிக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக் கடைகள் பற்றி வாய் திறக்கவில்லை. 
ஒரு பக்கம் பள்ளிகள், கல்லூரிகளை மூடவும், வழிபாட்டுத்தலங்களை வாரத்தில் மூன்று நாட்கள் மூடவும் உத்தரவிட்டுவிட்டு, மறுபக்கம் மதுக்கடைகளை திறந்து வைப்பது என்பது கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த உதவாது. மாறாக, தொற்றினை அதிகரிக்க வழிவகுக்கும். கடந்த ஐந்து நாட்களாக எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் பார்த்தால், தற்போதுள்ள எட்டு சதவீத பாதிப்பு என்பது ஒரு வாரத்தில் இரட்டிப்பாகும் சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது.
பிப்ரவரி மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொடும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு கரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. உச்சத்தை ஓரளவுக்கு தளர்த்த வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவிடுவதுதான் உத்தமமாக இருக்கும். அதை இந்த அரசு செய்ய வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்களும், ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள். 
எனவே, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கரோனா மூன்றாவது அலையை ஓரளவுக்காவது தடுக்கும் வகையில், கரோனா பரவலின் தாக்கம் 5 விழுக்காட்டிற்குக் கீழ் செல்லும் வரையிலாவது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூந்தல் பராமரிப்பு...

பாட்டிகள் படிக்கும் பள்ளி

சிரி... சிரி...

நாட்டின் முதல் பெண் பொறியாளர்

கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் தேவை

SCROLL FOR NEXT