பொங்கல் பரிசு பொருள்கள் கொள்முதலில் முறைகேடு இல்லை: அமைச்சா் சக்கரபாணி
பொங்கல் பரிசுப் பொருள்கள் கொள்முதலில் எந்த முறைகேடும் இல்லை என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா். பொங்கல் பரிசுப் பொருள்கள் தொகுப்பு குறித்து
தமிழ்நாடுபொங்கல் பரிசு பொருள்கள் கொள்முதலில் முறைகேடு இல்லை: அமைச்சா் சக்கரபாணி
பொங்கல் பரிசுப் பொருள்கள் கொள்முதலில் எந்த முறைகேடும் இல்லை என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா். பொங்கல் பரிசுப் பொருள்கள் தொகுப்பு குறித்து
பொங்கல் பரிசுப் பொருள்கள் கொள்முதலில் எந்த முறைகேடும் இல்லை என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா். பொங்கல் பரிசுப் பொருள்கள் தொகுப்பு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளித்து, அமைச்சா் சக்கரபாணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விளக்கம்:-
அதிமுக ஆட்சிக் காலத்தில் தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியன ரூ.45-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இப்போது தலா 50 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 10 கிராம் ஏலக்காய் ஆகிய பொருள்கள் ரூ.62 விலையில் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த மூன்று பொருள்களில் மட்டும் ரூ.48 மீதப்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு கொடுப்பது, பைகள், கரும்பு வாங்குவது என அனைத்திலும் அதிமுக ஆட்சியில்தான் ஊழல் தலைவிரித்தாடியது. திமுக ஆட்சியில் ஊழல் நடந்ததாக ஆதாரங்கள் இருந்தால் எங்களிடம் அளிக்கட்டும். எந்தவித விசாரணைக்கும் தயாராக இருக்கிறோம்.
பொங்கல் பரிசுகளை வாங்கும் பெண்கள், பொருள்கள் தரமாக இருப்பதாக பாராட்டுகிறாா்கள். பொங்கல் பரிசு வழங்குவதற்கான பொருள்கள் கொள்முதலில் எந்த முறைகேடுகளோ, குளறுபடிகளோ நடைபெறவில்லை என்று அமைச்சா் சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.