ஜன. 16ல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது; கட்டணம் திருப்பி அளிக்கப்படும்: போக்குவரத்துத்துறை
வருகிற ஜனவரி 16 ஆம் தேதி பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
வருகிற ஜனவரி 16 ஆம் தேதி பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று 2,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனிடையே பொங்கல் சிறப்புப் பேருந்துகளில் 75% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து, வருகிற ஜனவரி 16 ஆம் தேதி பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 16 அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு இரு நாள்களில் கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.