தமிழ்நாடு

பென்னாகரத்தில் நற்பணி மன்றத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா

DIN


பென்னாகரம்: பென்னாகரம் அருகே பருவதனஅள்ளியில் இளம் புயல் இளைஞர் நற்பணி குழுவின் தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பகுதியில் இளம் புயல் இளைஞர் நற்பணி மன்ற தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடும் நிகழ்விற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மன்ற தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். மன்ற செயலாளர் தமிழ்வாணன், துணைத் தலைவர் வெங்கடேசன், துணை செயலாளர் ரவிக்குமார் ,பொருளாளர் முருகவேல், துணைப் பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வுகளில் பென்னாகரம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் கலந்துகொண்டு, மன்றத்தின் பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பசுமையை காக்கும் வகையில் பருவதன அள்ளி பகுதியில் 60 மரக்கன்றுகள் நடப்பட்டது.

பின்னர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொது மக்களின் சார்பில் கட்டப்பட்ட விநாயகர் கோயில் சுற்றுச்சுவரை திறந்து வைத்தார். அதன் பின்பு 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எழுதுகோல் பரிசாக வழங்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜ், துணைத் தலைவர் சுசீலா, சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பழனி, தமிழாசிரியர் பெருமாள், காவல் துணை ஆய்வாளர் துரை, சமூக ஆர்வலர்கள் தேவகி, மணிவண்ணன்,  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT