தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு பாரம்பரிய மண்பானைப் பொங்கல்

DIN

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தை பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி மண்பானைப் பொங்கல் வைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை தைப்பொங்கலை முன்னிட்டு  மூலஸ்தானத்தில் உள்ள கற்பகவிநாயகர், சத்திய கீரீஸ்வரர், துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் 5 மண் பானைகளில் பொங்கல் வைத்து சமகாலத்தில் சிறப்பு தீபதூப ஆராதனைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து உற்சவர் சன்னதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கும் 5 மண்பானை பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. 

இதேபோல கோயிலில் உள்ள கோவர்தனாம்பிகை, அன்னபூரணி, நடராஜர், தட்சிணாமூர்த்தி, சண்முகர், 63 நாயன்மார்கள், பஞ்சலிங்கம், செந்தில் ஆண்டவர், சனீஸ்வரர், ஜூரதேவர் உள்ளிட்ட கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறிய மண்பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT