முகப்பு
தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: 21 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
கோப்புப்படம்
பகிர்:


மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.

பாலமேட்டில் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 7 சுற்றுகள் முடிவில் 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம் பிடித்து பைக்கை பரிசாகப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக 11 காளைகளை அடக்கி கார்த்திக் ராஜா இடம் பிடித்தார். அவருக்கு டிவி பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கான முதல் பரிசாக சிவகங்கை மாவட்டம் புலியூரைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளருக்கு கார் வழங்கப்பட்டது. 2-வது பரிசு நாட்டு மாடு காளையின் உரிமையாளர் பிரகாஷுக்கு வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் இரண்டு காவலர்கள் உள்பட 36 பேர் காயமடைந்தனர்.

ஜல்லிக்கட்டில் பிரபாகரன் முதலிடம் பிடிப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →