காலமானார் பத்திரிகையாளர் எஸ். துரைராஜ்
மூத்த பத்திரிகையாளர் எஸ். துரைராஜ் (70) உடல்நலக் குறைவு காரணமாக இன்று (சனிக்கிழமை) காலமானார்.
மூத்த பத்திரிகையாளர் எஸ். துரைராஜ் (70) உடல்நலக் குறைவு காரணமாக இன்று (சனிக்கிழமை) காலமானார்.
திருச்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர் துரைராஜ் தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர். பத்திரிகை துறையில் 41 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அவர் பிடிஐ, சிஎன்ஏ உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் மற்றும் முன்னணி ஆங்கில நாளிதழ்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றியுள்ளார்.
தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் பிரச்னைகளில் அதிகம் கவனம் செலுத்தக்கூடியவர். பத்திரிகையாளர் நலன்கள் மற்றும் உரிமைகளில் தொடர்ந்து அக்கறை காட்டும் துரைராஜ் பத்திரிகையாளர் அமைப்புகளில் முன் நின்று செயல்பட்டிருக்கிறார்.
Advertisement
அவரது உடல் திருச்சியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
திருச்சி இல்லம் முகவரி:
786, 16-வது குறுக்குத் தெரு,
வாசன் வேலி,
வயலூர் ரோடு,
திருச்சி - 620102