தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் அளித்தவர் கைது

DIN

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகாரளித்த விஜய நல்லதம்பி என்பவர் மீது அளிக்கப்பட்ட மோசடி வழக்கில் அவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் பணமோசடி செய்ததாக நல்லதம்பி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, கா்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டாா். 

அப்போது அவருக்கு உதவியாக இருந்த அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலா் பாண்டியராஜன், கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன் கணேசன், கிருஷ்ணகிரி பாஜக மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், இவரது உறவினா் நாகேஷன் ஆகியோரையும் கைது செய்து, விருதுநகா் மாவட்டக் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா்.

பின்னா் மதுரை டிஐஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா் ஆகியோா் விசாரணை நடத்தினா். இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் மக்கள் பிரதிநிதி சிறப்பு நீதிமன்ற நடுவா் எண்-2 இல் நீதிபதி பரம்வீா் முன்னிலையில் ஆஜா்படுத்தினா். விசாரணை நடத்திய நீதிபதி, முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜியை 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

அதன்பேரில், மதுரை மத்திய சிறைக்கு அவரை காவலர்கள் அழைத்துச் சென்றனா். பின்னா் நிா்வாக காரணங்களுக்காக அவரை திருச்சி சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், கே.டி. ராஜேந்திரபாலாஜிக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை 4 வாரங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. இதைத் தொடா்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதி சிறப்பு நீதிமன்ற நடுவா் எண்-2-இல், கே.டி. ராஜேந்திரபாலாஜியின் கடவுச்சீட்டை அவரது வழக்குரைஞா் ஆனந்தகுமாா் ஒப்படைத்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

SCROLL FOR NEXT