தமிழ்நாடு

‘அரசுப் பள்ளிகளில் 100% சிறார்களுக்கு முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளன’: மா. சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த அனைத்து சிறார்களுக்கும் கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு  ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் பள்ளிகளிலேயே கரோனா தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தி அனைத்து மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த அனைத்து சிறார்களுக்கும் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் 76 சதவீதம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

மேலும், தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக கரோனா பாதிப்பு குறைவாகவே பதிவாகி வருகின்றன. இருப்பினும், பொங்கல் விடுமுறை முடிந்துள்ளதால் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT