முகப்பு
தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்று முதல் நியாய விலைக் கடைகளில் பெறலாம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை இதுவரை பெறாதவா்கள், திங்கள்கிழமை முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை இதுவரை பெறாதவா்கள், திங்கள்கிழமை முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி: பொங்கல் பரிசுத் தொகுப்பு வர வேண்டிய நிலுவையுள்ள நியாய விலைக் கடைகளுக்கு பொருள்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. அன்றைய தினம் நியாய விலைக் கடைகளை மட்டும் திறந்து கூட்டுறவு சங்கங்களின் மூலமாக பொருள்களைப் பெற்று இறக்கி வைக்கும் பணிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவரும் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் அனைத்து நியாய விலைக் கடைகளில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →