முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 23,443 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 23,443 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 23,443 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்ப நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக 1,35,751 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 23,443 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,63,366 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 13,551 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் தலா 10 பேர் என மொத்தம் 20 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 27,74,009 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37,009 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 1,52,348 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

  • சென்னை - 8,591
  • செங்கல்பட்டு - 2,236
  • கோவை - 2,042
  • திருவள்ளூர் - 1,018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.