தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: நீதிமன்றத்தில் மனு

DIN

கரோனா பரவல் உச்சத்தில் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் சார்பில் வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், கரோனா அச்சுறுத்தலால் தற்போதையை சூழலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளி வைக்க வேண்டும். தேர்தலை நடத்தினால் கரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த வழக்கை நாளை மறுநாள் (ஜன.21) விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும், கரோனா பரவலுக்கு இடையே பலகட்டங்களாக வாக்குப்பதிவை நடத்துவது தொடர்பாகவும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

சிதம்பரத்தில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT