தமிழ்நாடு

சென்னை மக்களே.. கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமா?

DIN


சென்னை: கடந்த ஜனவரி மாதம் நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி, பல்வேறு கட்டங்களை அடைந்துள்ளது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முன்னெச்சரிக்க தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இணை நோயுள்ள, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் சென்னை முழுவதும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எனவே, இந்த தகுதியுள்ள, முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர், தங்கள் பகுதிக்கு அருகே அமைந்துள்ள முகாம்கள் குறித்து இங்குள்ள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.

இங்கே அழுத்தவும்.. தடுப்பூசி மையங்கள் குறித்து அறிய..

முன்னதாக, தமிழகத்தில் இனி வியாழக்கிழமைதோறும் பூஸ்டா் தவணை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கூறுகையில், இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் பூஸ்டா் தவணைக்கென சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் 600 இடங்களில் அந்த முகாம்கள் நடைபெறும். வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் பணியினை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT