புதுவையில் புதிதாக 2,783 பேருக்கு கரோனா 
தமிழ்நாடு

புதுவையில் புதிதாக 2,783 பேருக்கு கரோனா

புதுவையில் வியாழக்கிழமை புதிதாக 2,783 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், புதுவையில் கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

PTI


புதுவையில் வியாழக்கிழமை புதிதாக 2,783 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், புதுவையில் கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் புதுச்சேரி - 2,230, காரைக்கால்- 462, ஏனாம் - 68, மாஹே- 23 என மொத்தம் 2,783 (43 சதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,45,342-ஆக அதிகரித்தது. கரோனா நோயாளிகள் எண்ணிக்கை நேற்று 11,217 ஆக இருந்த நிலையில் தற்போது அது 13,053 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் தற்போது 144 போ் மருத்துவமனைகளிலும், 12,909 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என மொத்தம் 13,053 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியைச் சோ்ந்த 95 வயது பெண்மணி  உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,897-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.31 சதவீதமாக உள்ளது.

இதனிடையே 1,073 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,30,392-ஆக உயா்ந்தது. இதுவரை 15,12,236 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT