தமிழ்நாடு

மானாமதுரையில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட சாலைகள் அகற்றம்

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட சாலைகளை வருவாய் துறையினர் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.

மானாமதுரையில்  சிப்காட் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கே.கே.பள்ளம் வருவாய் பிரிவில் உடைகுளம் கண்மாயின் குறுக்கே ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்கப்படுவதாக மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசனுக்கு புகார் வந்தது.

இதையடுத்து சாலை அமைக்கப்பட்ட பகுதியில் வருவாய்துறையினரால் புல தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கண்மாய் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடியிருப்புகளுக்கு சாலை அமைக்கப்படுவது உறுதியானது.

இதையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு சாலை அகற்றப்பட்டது.

மேலும் இப்பகுதியில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த சாலையும் அகற்றப்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கையின்போது மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசன், மண்டல துணை வட்டாட்சியர், சிப்காட் காவல் சார்பு ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

SCROLL FOR NEXT