ரூ.1,000 மாதாந்திர பயண அட்டை வைத்திருப்போர் கவனத்துக்கு.. 
தமிழ்நாடு

ரூ.1,000 மாதாந்திர பயண அட்டை வைத்திருப்போர் கவனத்துக்கு..

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் பயணச்சீட்டு விற்பனை மையங்களில் 24.01.2022 அன்று ஒரு நாள் மட்டும் நீட்டித்து மாதாந்திர சலுகை பயண அட்டைகள் வழங்கப்படும்

DIN

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் பயணச்சீட்டு விற்பனை மையங்களில் 24.01.2022 அன்று ஒரு நாள் மட்டும் நீட்டித்து மாதாந்திர சலுகை பயண அட்டைகள் வழங்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயணச் சலுகை அட்டை விற்பனை மையங்களில், ஒவ்வொரு மாதமும், 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000/- மதிப்பிலான மாதாந்திர பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், கடந்த 09.01.2022 மற்றும் 16.01.2022 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பயணிகள் நலன் கருதி மாதாந்திர சலுகை பயணச்சீட்டுகளை 24.01.2022 அன்று ஒரு நாள் மட்டும் நீட்டித்து, அனைத்து மாநகர போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச் சீட்டு விற்பனை மையங்களிலும் வழக்கம் போல பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT