தமிழ்நாடு

ஐஐடி வளாகத்தில் நடமாடும் கரோனா பரிசோதனைக் கூடம்: மா. சுப்பிரமணியன் ஆய்வு

DIN


சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று நேரில் பார்வையிட்டார்.

கரோனா பரிசோதனை நடத்த முடியாது மிக பின்தங்கிய கிராமப் பகுதிகளில், மிக எளிதாக பரிசோதனை நடத்தி முடிக்கும் வகையில் இந்த நடமாடும் கரோனா பரிசோதனை வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

பராக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனம், கரோனா பரிசோதனைக் கூடங்கள் அருகாமையில் இல்லாத கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று தொற்று பாதிப்பைக் கண்டறியும் வகையில் பயன்படுத்தப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், நடமாடும் கரோனா பரிசோதனைக் கூடத்தை ஆய்வு செய்ததில் மகிழ்ச்சி. பிஐஆர்ஏசி சார்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள இந்த வாகனம் சென்னை ஐஐடிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT