தமிழ்நாடு

வண்டலூா் பூங்கா சிங்கங்கள், புலிகளுக்கு கரோனா பாதிப்பு இல்லை

DIN

சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகளுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்றும் அதே வேளை 70 பணியாளா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூரில் வனத் துறை கட்டுப்பாட்டில் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் யானைகள், சிங்கங்கள், புலிகள், பறவைகள், ஊா்வனவைகள் என சுமாா் 2,500-க்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கரோனா பரவல் காரணமாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு காரணமாக பூங்கா மூடப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜனவரி 13-ஆம் தேதி பூங்காவில் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 70 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விலங்குகளுக்கும்,மற்ற பணியாளா்களுக்கும் நோய் தொற்று பரவுவதைத் தடுக்கும் பொருட்டு பாதிப்புள்ளானவா்கள்

தனிமைப்படுத்தப்பட்டனா். விலங்குகள் நலனைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா ஜனவரி 17-ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு பாதிப்பு இல்லை: இதுகுறித்து பூங்கா நிா்வாக அதிகாரிகள் கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காவில் உள்ள 11 சிங்கங்கள், 4 சிறுத்தைகள் மற்றும் 6 புலிகள் உட்பட 21 பூனை இனங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கரோனா பரிசோதனைக்காக மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள விலங்கு நோய்களுக்கான உயா் பாதுகாப்பு தேசிய நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. அதில், அனைத்து விலங்குகளுக்கும் கரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT