தமிழ்நாடு

முழு பொது முடக்கம்: எடப்பாடி பகுதியில் முக்கிய சாலைகள் வெறிச்சோடின

DIN


எடப்பாடி: ஞாயிற்றுக்கிழமை முழுபொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் எடப்பாடி நகரின் பெரும்பாலான வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்திடும் நோக்கில், தமிழக அரசு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையில் தளர்வுகள் அற்ற முழு போது முடக்கத்தினை  அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

குறிப்பாக எடப்பாடி பேருந்து நிலையம், உழவர் சந்தை, ராஜாஜி பூங்கா காய்கறி மார்க்கெட், நகராட்சி அங்காடி, சின்னக்கடை வீதி, பஜார் தெரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

நகரின் ஒரு சில இடங்களில் மருத்துவமனைகள், தனியார் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. 

நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT