தமிழ்நாடு

சையது மோடி சா்வதேச பாட்மின்டன்: சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு தமிழிசை வாழ்த்து

சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார்.

DIN

சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார்.

சையது மோடி சா்வதேச பாட்மின்டன் தொடரின் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இளம் வீராங்கனை மாளவிகா பன்சோட்டிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

நாக்பூரை சேர்ந்த 20 வயதான மாளவிகா பன்சோட் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பல்கலை.யில் 2ஆம் ஆண்டு பி.டெக் படிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்டிவிட்டரில், சையது மோடி சர்வதேச பாட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி. வி. சிந்துவுக்கும், மிகச்சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை சென்று வெள்ளிப் பதக்கம் வென்ற எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி மாளவிகா பன்சோட்டிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT