தமிழ்நாடு

முதுபெரும் தொல்லியல் அறிஞர் ஆர்.நாகசாமி மறைவு

DIN

முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் ஆர்.நாகசாமி (91) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜன.23) பிற்பகல் உயிரிழந்தார். 

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் நாகசாமி. இவர் தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞராக பலரால் அறியப்பட்டவர்.

நாகசாமியின் பணிகளைப் பாராட்டி அவரை அங்கீகரிக்கும் வகையில், 2018-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்தது.

இந்திய தொல்லியல் ஆய்வகத்தில், தொல்லியல் துறையில் பயிற்சி எடுத்த ஆர். நாகசாமி, 1959 முதல் 1963-ஆம் ஆண்டு வரை சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக பணியில் சேர்ந்தார்.

1963 முதல் 1966-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும், பின்னர் 1966 முதல் 1988-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராகவும் இருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT