அண்ணா பல்கலைக்கழகம் 
தமிழ்நாடு

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை வெளியீடு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். பயிலும் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

DIN


சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். பயிலும் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, இறுதியாண்டுத் தேர்வினைத் தவிர அனைத்துக் கல்லூரி பருவத் தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்துவது என்று தமிழக உயர்கல்வித் துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., ஆகிய வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகத்தின்  இணைய முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம். தேர்வு அட்டவணையைக் காண..

பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இரு வேளைகளிலும் தேர்வுகள் நடத்தப்படும் வகையில் தேர்வு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரிப் பருவத் தேர்வுகள் பிப்ரவரி  1-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தமிழக உயர்கல்வித் துறையால் அறிவிக்கப்பட்ட நிலையில் பாடவாரியாக தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT